புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக ஊடகவியலாளர் றஹ்மத்துல்லாஹ் (புவி)அனுமதியை கோரியுள்ளார்

எம்.எஸ்.எம்.நூர்தீன்
புனித ஹஜ் கடமைக்காக மக்காவுக்கு மோட்டார் சைக்கிளில் தரை மார்க்கமாக செல்வதற்காக காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

குடிநீர் வசதி இல்லாத மக்களுக்கு குடி நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது மிகப் பெரிய நன்மையாகும் – காத்தான்குடி நகர சபை தவிசாளர் அஸ்பர்

குடிநீர் வசதி இல்லாத மக்களுக்கு குடி நீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது மிகப் பெரிய நன்மையாகும் என காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார். 

காத்தான்குடியில் 520 பயணாளிகளுக்கு ஸக்காத் நிதி பகிர்ந்தளிப்பு

காத்தான்குடியில் 520 பயணாளிகளுக்கு ஸக்காத் நிதி கையளிக்கப்பட்டது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் பைத்துஸ் ஸக்காத் அமைப்பினால் இந்த ஸக்காத் நிதி பயணாளிகளுக்கு வழங்குவதற்காக 6.4.2018 வெள்ளிக்கிழமை இரவு பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபைக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி நிதித்துவம் நான்கு பேருக்கு சுழற்சிமுறையில் பகிர்ந்தளிக்க ஒப்பந்தம்

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி நிதித்துவம் நான்கு பேருக்கு சுழற்சிமுறையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பெண்கள் ஒன்றியம் அங்குரார்ப்பணம்

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் ஒன்றியம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி இந்த பெண்கள் ஒன்றியம் அமைக்கப்பட்டுள்ளது

வாகரை பிரதேச சபையின் தலைவராகத் தெரிவானவர் சற்று நேரத்தில் கைது

மட்டக்களப்பு,கோறளைப்பற்று வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் வாகரை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அமித் வீரசிங்க உள்ளிட்ட 18 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

கண்டியில் இடம்பெற்ற இனவாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இனவாத அமைப்பான மகாசொஹொன் பலகாயவின் தலைவர், அமித் வீரசிங்க உட்பட 18 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அரிய மான் இனத்தை வேட்டையாடிய சல்மானுக்கு 5 வருட சிறை

அரிய வகை மான் இனத்தை வேட்டையாடி சுட்டுக் கொன்ற வழக்கில் பொலிவூட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனையும் 10,000 ரூபா (இந்திய ரூபா) அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து 52 வயதான நடிகர் சல்மான்கான் ஜோத்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசை பலப்படுத்த அழைப்பு; தேர்தல் முறையில் மாற்றம்

அரசாங்கத்தை வலுப்படுத்த பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு புதிய மேயர் விஜயம்

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய மேயர் தியாகாராசா சரவணபவன் இன்று (6.4.2018) வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள ஜாமியுஸ்ஸலாம் ஜும்ஆப்பள்ளிவாயலுக்கு சென்றார்.

ஊரின் நன்மை பயக்கின்ற திட்டங்கள் அத்தனைக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் :நகரசபை உறுப்பினர்  இல்மி அஹமட் லெவ்வை

மக்கள் நலனுக்காக கட்சி வேறுபாடுகளுக்கப்பால் உழைப்பபோம் ஊரின் நன்மை பயக்கின்ற திட்டங்கள் அத்தனைக்கும் ஒத்துழைப்பு வழங்குவோம் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்  நகரசபை உறுப்பினர்  இல்மி அஹமட் லெவ்வை BA  குறிப்பிட்டார்

கட்சித் தீர்மானத்துக்கு அமையவே நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை: இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விளக்கம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமையவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தான் பங்கேற்கவில்லை என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபையின் முதலாவது அமர்வில் சிப்லி பாறூக் கலந்து கொள்ளவில்லை.

காத்தான்குடி நகர சபையின் முதலாவது அமர்வில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கலந்து கொள்ளவில்லை.

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக அப்துல் வாசித் அலி தெரிவு செய்யப்பட்டார்.

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக அப்துல் வாசித் அலி இரண்டு மேலதிக வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 7வது மேயராக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தியாகராஜா சரவணபவன் தெரிவு

மட்டக்களப்பு மாநகர சபையின் 7வது மேயராக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தியாகராஜா சரவணபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆரையம்பதி பிரதேச சபையின் தவிசாளராக மகேந்திரலிங்கம் ஒரு மேலதிக வாக்கினால் தெரிவு

மண்முனைப்பற்று(ஆரையம்பபதி) பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது. இந்த சபையின் தவிசாளராக சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த சோமசுந்தரம் மகேந்திரலிங்கம் ஒரு மேலதிக வாக்கினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு முதலாம் தவணை விடுமுறை

20118 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கை நாளை மறுதினம் (06) நிறைவடைகின்றது.

பிரதமருக்கு எதிரான பிரேரணை 46 வாக்குகளால் தோல்வி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக, பாராளுமன்றத்தில் அவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள 117 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ; தவிசாளரின் அதிரடி நடவடிக்கை

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள 117 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

மஞ்சந்தெர்டுவாய் பிரதேசத்தில் மூன்று மாதக் குழந்தை உயிரிழந்த சம்வம் தொடர்பில் விசாரணை

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தெர்டுவாய் பிரதேசத்தில் மூன்று மாதக் குழந்தை யொன்று உயிரிழந்த சம்வம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.